என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எலுமிச்சை பழம்"
- வெப்பத்தை தணிப்பதில் எலுமிச்சை பழம் முக்கிய பங்காற்றி வருகிறது.
- கோடை காலம் முடியும் வரை எலுமிச்சை பழத்தின் விலை குறையாது.
திருச்சி:
தமிழகத்தில் கோடை வெயில் அனல் பறக்கிறது. இதில் உடல் வெப்பத்தை தணிப்பதில் எலுமிச்சை பழம் முக்கிய பங்காற்றி வருகிறது. நன்னாரி சர்பத், எலுமிச்சை ஜூஸ், லெமன் டீ போன்ற வற்றுக்கு எலுமிச்சை பழம் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இது எளிய மக்களின் தேர்வாகவும் எலு மிச்சை உள்ளது. தற்போது இதன் தேவை அதிகரித்து விளைச்சல் குறைந்துள்ள காரணத்தினால் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
பெரம்பலூரில் எலு மிச்சை பழங்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல் தர எலுமிச்சை பழம் ஒன்று ரூ.4-க்கும், 2-ம் தர பழம் ஒன்று ரூ.2-க்கும் விற்பனையானது. ஆனால் தற்போது விலை உயர்ந்து முதல் தர எலுமிச்சை பழம் ஒன்று ரூ.8-க்கும், 2-ம் தர பழம் ஒன்று ரூ.4-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து எலுமிச்சை பழம் விற்பனை செய்யும் வியாபா ரிகள் கூறுகையில், பெரம்ப லூருக்கு அயிலூர் குடிகாடு, சிறுகன்பூர், திருச்சி மாவட்டம், திருப்பட்டூரில் இருந்து எலுமிச்சை பழம் விற்ப னைக்கு வருகிறது. வெயில் காலத்திற்கு முன்பு குறைந்த விலையில் விற்பனை செய் யப்பட்ட எலுமிச்சை பழம் தற்போது கோடை வெயி லினால் வரத்து குறைவாலும், தேவை அதிகமானதாலும் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பெரம்பலூரில் எண் ணிக்கை அடிப்படையில் எலுமிச்சை பழம் விற்பனை செய்யப்படுகிறது. கோடை காலம் முடியும் வரை எலுமிச்சை பழத்தின் விலை அதிகரிக்குமே தவிர குறையாது என்றனர்.
மணப்பாறை காமராஜர் மார்க்கெட் காய்கறி கமிஷன் மண்டி உரிமையாளர் நாகூர் கனி கூறியதாவது:-
மணப்பாறை காமராஜர் மார்க்கெட்டுக்கு வையம் பட்டி, துவரங்குறிச்சி, விராலி மலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலிருந்து விவசாயிகள் எலுமிச்சை பழங்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
தினமும் இங்கு 200 மூட்டை எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்படுகிறது. ஒரு மூட்டை 50 கிலோ எடை இருக்கும். இங்கு வரும் 200 முட்டை எலுமிச்சை பழங்க ளில் 80 சதவீதம் உள்ளூர் சில்லறை வியாபாரிகளுக்கு செல்கிறது.
மீதமுள்ளவை ஒட்டன்சத்திரம் வியாபாரிகள் மூலமாக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது மேற்கண்ட பகுதி களில் கடும் வறட்சி நிலவி வருவதால் விளைச்சல் சரிந்து உள்ளது. ஆகவே மார்க்கெட் டுக்கு 50, 60 மூட்டை எலுமிச்சை பழங்கள் மட்டுமே வருகின்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு மூட்டை எலு மிச்சை பழம் ரூ. 2000 முதல் 2500க்கு ஏலம் விடப்பட்டது. தற்போது தேவை அதிகரித்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ரூ. 7000 வரை ஏலம் போகிறது. இதனால் சில்லறை கடைக ளில் ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ. 12 என நிர்ண யிக்கப்பட்டுள்ளது. நன்னாரி சர்பத்தின் விலையும் பல இடங்களில் 20 லிருந்து ரூ. 25 வரை விலை உயர்ந்துள்ளது.
- அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.
பொதுவாக, வயதாகும்போது நமது உடலில் பல மாற்றங்களை சந்திக்கிறது. அதில் ஒன்று தான் தோல் சுருக்கும். இது வயதாகும்போது வருவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், ஒரு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கைகளில் இருக்கும் தோல் சுருங்கி போய் காட்சியளிக்கும். இதற்கு காரணம் உடலில் நீரிழப்பு, கைகளை அடிக்கடி கழுவுதல், பாத்திரங்கள் கழுவுதல் போன்றவை ஆகும். இருப்பினும், சில பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.
ஏனென்றால், முகம் அழகாக தெரிந்தால் போதும் என்று நினைப்பது தான். அதுமட்டுமல்லாமல், அதற்கு தனியாக செலவு செய்ய வேண்டியிருக்குமே என்றும் நினைப்பார்கள். பார்லருக்கு போய் அதையும் இதையும் பண்றதுக்கு பதிலாக வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தியே கைகளில் இருக்கும் சுருக்கங்களை போக்கி அழகான சருமத்தை பெற முடியும். மேலும் உங்க சருமத்தை மினுமினுப்பாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளும். இவ்வாறு இயற்கை பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
எலுமிச்சை ஸ்க்ரப்
நமது சருமத்தில் இருக்கும் அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த எலுமிச்சை ஸ்க்ரப் தான். அதற்கு ஒரு கப்பில் 3 அல்லது 4 ஸ்பூன் சர்க்கரையும், 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர், கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவிவிட்டு, இந்த கலவை கைகளில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். காய்ந்தவுடன் சாதாரண தண்ணீரில் கைகளை கழுவிடுங்கள். இதை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வர மென்மையான கைகளை பெறலாம்.
பால்
பால் ஒரு சிறந்த மாய்ஸ்ச்சரைசர். இதை சரும பராமரிப்புக்கு பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்கவும் உதவும். முதலில் எலுமிச்சை ஸ்க்ரப் செய்துக் கொள்ளவும். பின்னர், ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் பால், அதனுடன் பாதாம் எண்ணெய் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையில் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு கைகளை அப்படியே வைத்திருக்கவும். பின் கைகளை வெளியே எடுத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். இதை வாரத்தில் 4 அல்லது 5 முறை செய்துவர கைகளில் உள்ள சுருக்கங்கள் மறையத் தொடங்கும்.
அன்னாசி கூழ்
வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ள அன்னாசி பழத்தை சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கக்கூடியது. முதலில் அன்னாசி பழத்தை நன்றாக கூழ் போன்று பிசைந்துக் கொள்ளவும். அந்த கூழை கைகள் முழுக்கத் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவி விடவும். மென்மையான மற்றும் சுருக்கமில்லாத கைக்கு இந்த ஹேண்ட் மாஸ்க்கை தினமும் பயன்படுத்தலாம்.
ஆலிவ் ஆயில்
தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு கைகளை மசாஜ் செய்துக் கொள்ளுங்கள். பின்னர், பருத்தி கையுறைகளை அணிந்து அவற்றை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். மீண்டும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவிக் கொள்ளுங்கள். இதை தினமும் செய்துவர கைகளை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும்.
வாழைப்பழம்
மேற்கூறிய எதுவும் செய்ய முடியாதவர்கள் வாழைப்பழத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தில் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, அவை சுருக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றதாக அமைகின்றன. வாழைப்பழத்தை நசுக்கி கூழ் போன்று செய்துக் கொள்ளவும். அந்த கூழை உங்கள் கைகளில் தடவி காய்ந்தவுடன் கழுவிவிடுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை செய்துவர மென்மையான கைகளை பெறலாம்.
- சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளிலும், ஆந்திரா மாநிலத்திலும் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.
- கடந்த மாதம் எலுமிச்சை பழத்தின் வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் விலை சரிந்தது.
சேலம்:
தமிழகத்தில் சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளிலும், ஆந்திரா மாநிலத்திலும் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் எலுமிச்சை தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த மாதம் எலுமிச்சை பழத்தின் வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் விலை சரிந்தது. ஒரு பழம் ரூ.2 முதல் ரூ.4 வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 20-ந்தேதிக்கு மேல் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தர்பூசணி, மூலம் பழம் ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், கரும்பு சாறு, இளநீர், சர்பத் உள்ளிட்டவைகளை நாடி வருகின்றனர். இதனால் எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் எலுமிச்சை பழத்தின் வரத்து 20 சதவீதம் குறைந்துள்ளது.
வரத்து குறைவால் கடந்த மாதத்தை காட்டிலும் நடப்பு மாதத்தில் விலை சற்று உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தை, தினசரி சந்தை, சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு தினசரி 30 முதல் 40 டன் எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது.
இங்கு விற்பனைக்கு வரும் எலுமிச்சை பழத்தை சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர். மேலும் ஜூஸ் கடைக்காரர்கள் மற்றும் ஓட்டல்கள், விடுதி உணவகம் நடத்துபவர்களும் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். பொதுமக்கள் தங்களது பல்வேறு ேதவைகளுக்காகவும், விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் எலுமிச்சை பழங்கள் வாங்கிச் செல்கின்றனர்.
இந்த நிலையில் மாவட்டத்தில் நிலவி வரும் அதிக வெயில் காரணமாக எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. ஒரு பழம் ரூ.6 முதல் ரூ.8 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். அப்போது எலுமிச்சை பழத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
- எலுமிச்சை பழம் விலை வீழ்ச்சி புதுக்கோட்டையில் கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- நாளுக்குநாள் சரிவடைவதால் விவசாயிகள் வேதனை
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் ஆழ்குழாய் கிணறு பாசனம் மூலமாக, எலுமிச்சை மரங்க ளை நட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் உற்பத்தியாகும் எலுமிச்சை பழங்கள் திருச்சி, மது ரை, தஞ்சை, கோவை, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் சவுதி கத்தார், துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்ப டுகிறது.
இப்பகுதிகளில் விளையும் எலுமிச்சை பழங்களை வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகள் மற்றும் எலுமிச்சை பழக்கடைகள் மூலம் நாள்தோறும் டன் கணக்கில், விவ சாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். எலுமிச்சை பழங்க ள் தற்போது கிலோ ரூ.15-க்கு மட்டுமே வாங்கப்பட்டு வருவதால் எலு மிச்சை பயிரிட்டுள்ள விவசா யிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.
மேலும் நாளுக்கு நாள் இதன் விலை வீழ்ச்சி கண்டு வருவதால் வி வசாயிகள் அதிருப்தி அடைந்த நிலையில் இருந்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது எலுமிச்சை உற்பத்தி ஓரளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், எலுமிச்சை விலை வீழ்ச்சியால் கவலைப்பட்டு வருவதாகவும், இந்தாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டுமே உற்பத்தி குறைந்து இருந்த சமயத்தில் மட்டும் எலுமிச்சை பழங்கள் கிலோ ரூ.70, ரூ.80 க்கு வாங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் படிப்படியாக உற்பத்தி அதிகரித்த நிலையில், கடந்த வாரம் கிலோ ரூ.20 வரை விற்பனை ஆகி வந்த எலுமிச்சை பழங்கள் தற்போது, கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் எலுமிச்சை பழம் விலை வீழ்ச்சியை தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்னார்கள்.
- வரத்து அதிகரிப்பு காரணமாக ஈரோடு மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விலை குறைந்தது
- ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.
ஈரோடு, ஜூன். 9-
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு கொடைக்கானல், திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம் போன்ற பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்கு வருகிறது. தினமும் 3 டன் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் திடீரென விளைச்சல் குறைந்ததால் மார்க்கெட்டுக்கு குறைந்த அளவே பழங்கள் விற்பனைக்கு வந்தன. எலுமிச்சை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மேலும் கோடை காலம் என்பதால் அதன் தேவையும் அதிகரித்தது.
இதனால் எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது. மேலும் கோவில் விசேஷங்கள் அதிக அளவில் தொடர்ந்து வந்ததால் எலுமிச்சம்பழம் தேவை அதிகரித்து தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் மீண்டும் எலுமிச்சம்பழம் விளைச்சல் அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டுக்கு எலுமிச்சம் பழங்கள் வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இன்று கொடைக்கானல், திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம், பெங்களூர், சேலம், கோவை, திருச்சி போன்ற பகுதிகளிலிருந்து எலுமிச்சை பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இன்று மட்டும் 5 டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
வரத்து அதிகரிக்க தொடங்கியதன் எதிரொலியாக விலையும் சரிய தொடங்கியது. இன்று ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.80-க்கு விற்பனை யானது. சில்லறையில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.5-க்கு விற்பனையானது. ஒரு கிலோவில் 22 முதல் 25 எலுமிச்சை பழங்கள் உள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர். குளமங்கலம், பனங்குளம், பாண்டிக்குடி, நெய்வத்தளி, சேந்தன்குடி, நகரம் கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் தென்னந்தோப்புகளுக்குள்ளும், தனியாகவும் எலுமிச்சை சாகுபடி செய்து வருகின்றனர். கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, புளிச்சங்காடு கைகாட்டி, பனங்குளம், குளமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 10 டன் வரை எலுமிச்சை பழங்கள் விற்பனைக்காக வருகிறது.
ஆனால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.12-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ. 5-க்கும் குறைவாக வாங்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வியாபாரிகளும் மொத்தமாக வாங்கி வெளியூர்களுக்கு அனுப்பும் போது ரூ.10-க்கும் குறைவாகவே விற்கப்படுவதால் அவர்களுக்கும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- கடந்த சில ஆண்டுகளாக மே, ஜூன், ஜூலை மாதங்களில் ஒரு கிலோ எலுமிச்சை பழங்கள் ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை ஆனது. அதனால் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகபட்ச விலை ரூ.20-க்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது கிலோ ரூ. 10, ரூ.12 என்று விற்கப்பட்டு வந்த எலுமிச்சை பழங்கள் தற்போது கிலோ ரூ. 5-க்கு விற்பனை ஆகிறது. அதனால் விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை இல்லாமல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. உற்பத்தி செலவுக்கு கூட பழங்களின் விற்பனை இல்லை என்பதால் ஒவ்வொரு நாளும் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது.
கீரமங்கலம் சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களில் காய்கறிகள், பழங்கள், மலர்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. ஆனால் அவற்றை பாதுகாப்பாக வைக்க குளிர்பதன கிடங்கு இல்லாததால் கட்டுபடியான விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் நட்டத்தில் விற்கும் நிலை உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் குளிர்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக வேட்பாளர்கள் சொல்லிவிட்டு சென்றுவிடுகின்றனர். அதன் பிறகு நடவடிக்கை எடுப்பதில்லை. குளிர்பதன கிடங்கு இருந்தால் விலை குறையும் காலங்களில் மலர்கள், காய், கனிகளை வைத்திருந்து விலை உயரும் போது விற்பனை செய்ய முடியும்.
அதேபோல எலுமிச்சை ஜூஸ் என்று ரசாயனம் கலந்த பானங்களை விற்கும் கடைகாரர்கள் நேரடியாக எலுமிச்சை பழங்களை கொள்முதல் செய்து தரமான ஜூஸ்களை விற்பனை செய்தால் மக்களுக்கும் பாதிப்பு இல்லை. விவசாயிகளுக்கும் எலுமிச்சை பழங்களின் விலை உயர வாய்ப்புகள் உள்ளது.“
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்